தாயும் குழந்தையும் சடலமாக மீட்ப்பு! - Yarl Thinakkural

தாயும் குழந்தையும் சடலமாக மீட்ப்பு!

சந்தேகத்திற்கு இடமான வகையில் பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய் மற்றும் குழந்தை ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தாய் மற்றும் அவரது 5 வயதுடைய குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post