தமிழர்களை மடயர்களாக்க ஆளுநர் முற்படுகின்றார்! -சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

தமிழர்களை மடயர்களாக்க ஆளுநர் முற்படுகின்றார்! -சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு-

ஜ.நாவிடம் சமர்ப்பிப்பதற்கான முறைப்பாடுகளை தருமாறு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடயர்கள் ஆக்கும் செயல் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றும் சுமத்தியுள்ளார். 

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் தடுக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-  

ஜ.நாவிடம் தெரிவிப்பதற்கான முறைப்பாடுகளை மக்கள் தருமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடயர்கள் ஆக்குகின்ற விடயம். 

இந்த அரசாங்கத்தால் எத்தனையோ குழுகள் நியமிக்கப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மக்களால் சாட்சியங்களும் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்த பயனும் இல்லை. 

20 ஆயிரம் பேர் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் என்று அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட ஜக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அலுவலகத்திற்கும் ஏறக்குறைய இதே அளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உறவுகளுக்கு ஏதும் நடந்துவிடும் என்று அச்சத்தில் இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாமல் உள்ளார்கள். இதைவிடுத்து மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசம் ஒரு இலட்சத்தில் 46 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தில் இல்லை என்று தகவல் வெளியிட்டிருந்தார். 

ஜ.நாவின் இரு குழுக்களும் இத்தவல் தொடர்பல் ஆராய்ந்து. ஒரு குழு 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மற்றைய குழு 70 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தின் போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநர் ஜ.நாவிடம் கொடுக்கும் முறைப்பாட்டை தருமாறு மக்களின்டம் கோருவது எந்த விதத்தில் நியாயமானதாக இருக்கும். 

வடக்கு ஆளுநர் இங்கு நடத்துவது குறைகேள் அரங்கா எல்லத நடமாடும் சேவையா? என்று புரியவில்லை. சர்வதேசத்திற்கு முறையிட்டு முறையிட்டு தமிழ் மக்கள் களைத்துவிட்டார்கள். வடக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளுகின்றோன் என்றார். 
Previous Post Next Post