மாநகர உறுப்பினர்களுக்கு சிமாட் போன் லப்டொப் தேவை! -கோருகிறார் தர்சானந்- - Yarl Thinakkural

மாநகர உறுப்பினர்களுக்கு சிமாட் போன் லப்டொப் தேவை! -கோருகிறார் தர்சானந்-

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு சிமாட் போன் மற்றும் லப்டொப் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் தர்சானந் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாக்கிழமை காலை சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது.

இவ்வமர்வின் ஆரம்பத்தில் முதல்வர் இமானுவேல் ஆனால்ட் ஒவ்வொரு மாதாந்த கூட்ட அறிக்கையும் அதிகளவிலான பக்கத்தில் அச்சிடப்படுகின்றது. அவை ஒவ்வொரு உறுப்பினர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், செலவும் அதிகரிக்கின்றது.

இதனால் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய மெயில ஜடியை கொடுத்தால் அவர்களுக்கு மாதாந்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு செய்தால் செலவும் குறைக்கப்படுவதுடன், உறுப்பினர்களுக்கு மிக வரைவாக கூட்ட அறிக்கையினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் தர்சானந் எல்லோரிடமும் வசதிகள் இல்லை.

இதனால் மாநகர சபை உறுப்பினர்களுக்கு சிமாட் போன் மற்றும் லப்டொப் என்பவற்றை தந்தால் மாதாந் கூட்ட அறிக்கையினை நாங்கள் பார்வையிட வசதியாக இருக்கும் என்றார். அவருடைய கருத்தினை வரவேற்று பல உறுப்பினர்கள் மேசையில் கையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் தருவதாக வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.
Previous Post Next Post