கைவே பொலிஸால் விபத்து! -தாயும் மகனும் வைத்தியசாலையில்-  - Yarl Thinakkural

கைவே பொலிஸால் விபத்து! -தாயும் மகனும் வைத்தியசாலையில்- 

நெடுஞ்சாலை (கைவே) போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் ஏற்ப்பட்ட விபத்து சம்பவத்தில் தாயும், மகனும் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் கொடிகாமம் மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.

மிருசுவில் ப் பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த  டிப்பர் வாகனத்தை வீதியின் மறுபக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த வீதிப் போக்கு வரத்துப் பொலிஸார் திடீரென மறித்துள்ளனர். இதனால்  டிப்பர் சாரதி சடுதியாக தடுப்பை (பிரேக்) பிரயோகித்துள்ளார். 

இதனால் டிப்பர் வாகனத்துக்கு பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்தனர். 

குறித்த விபத்து சம்பவம் இடம்பெற பகுதி வளைவான வீதிப் பகுதி, அத்துடன் டிப்பர் பயணித்த பகுதியின் மறு பக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாறே வீதிப் போக்கு வரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தமை, பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிய வீதிப் போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
Previous Post Next Post