காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்! -முடிந்ததை செய்வோம்: அமெரிக்க தூதுவர் அலைனா- - Yarl Thinakkural

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்! -முடிந்ததை செய்வோம்: அமெரிக்க தூதுவர் அலைனா-

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசுடன் பேசி எம்மால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வோம் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் அமெரிக்கன் கோணரில் யூடிப் கலையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு கொண்டார்.

இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தமக்கான நீதியினை அமெரிக்க அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா அரசாங்கம் கரிசனை கொள்ளுமா? ஏன கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்iகியல்:-

நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அவர்களது உறவினர்கள் பதிலளிக்குமாறு கோருகின்றனர்.

அரசாங்கத்துடன் பேசி காணாமல் போனோர் தொடர்pல் எம்மால் ஆனதை செய்வோம் என்றார்.

Previous Post Next Post