இந்தியாவுடன் மோதும் ட்ரம்ப் - Yarl Thinakkural

இந்தியாவுடன் மோதும் ட்ரம்ப்இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுங்க வரி விதிப்பின்றி பல பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயற்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காததால், நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று அமெரிக்க நாடாளுமன்ற கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post