-அதீத வெப்பம்:மதுசாரம் ,இனிப்பு நுகர்வது ஆபத்து- சுகாதா அமைச்சு எச்சரிக்கை! - Yarl Thinakkural

-அதீத வெப்பம்:மதுசாரம் ,இனிப்பு நுகர்வது ஆபத்து- சுகாதா அமைச்சு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்தச் சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிப்பும், மதுசாரமும் செறிந்த பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Previous Post Next Post