ஜ.நா விவகாரம்! -தமிழ் கட்சிகள் ஒன்று கூடி ஆராய்வு- - Yarl Thinakkural

ஜ.நா விவகாரம்! -தமிழ் கட்சிகள் ஒன்று கூடி ஆராய்வு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் ஒருமித்து எடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று சனிக்கிழமை யாழில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளன.

தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இச் சந்திப்பு யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இன்று காலை நடைபெற்றது. இக் கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலைக்

கூட்டணி, ஈ.பீ.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளுக்கு ரெலோ அழைப்பு விடுத்திருந்தது.

ஆயினும் இக்கூட்டத்தில் ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும்

பிரதிநிதிகள்  கலந்து கொண்டு இவ் விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தன.

அதே நேரம் இக் கலந்துரையாடல் முடிவடையும் வரையில் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கலந்துரையாடலுக்கு வரவில்லை. ஆனாலும் கூட்டம் முடிவடைந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் வெளுயேளியுருந்த பின்னர் கலந்துரையாடல் நடைபெற்ற இடத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வருகை தந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு நின்றுருந்த ரெலோ அமைப்பின் செயலாளர் மற்றும் தவிசாளர் மற்றும் இளைஞரணிச் செயலாளர் ஆகியோருக்கும் மாவை சேனாதிராசவிற்கும் இடையில் திரும்ப ஒரு கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post