தாயை சந்தித்த பிரதமர் மோடி - Yarl Thinakkural

தாயை சந்தித்த பிரதமர் மோடிகுஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற பிரதமர் மோடி இடையே தனது தாயை அரை மணிநேரம் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார்.

அஹமதாபாத்துக்கு அருகில் உள்ள ரைஸன் கிராமத்தில் பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் தாய் ஹிராபாவும் வசித்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே தனது தாயை பார்க்க நேற்று பிரதமர் மோடி சென்றார்.

அங்கு தாய் மற்றும் உறவினர்களுடன் அரைமணி நேரம் பேசிய பிரதமர் மோடி பின்னர் அருகிலுள்ள சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Previous Post Next Post