பக்குவப்படாத உறுப்பினர்களே யாழ்.மாநகர சபையில்! -மேயரின் ஆதங்கம் இது- - Yarl Thinakkural

பக்குவப்படாத உறுப்பினர்களே யாழ்.மாநகர சபையில்! -மேயரின் ஆதங்கம் இது-

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

தமது கௌரவத்தை கூட தாமே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத நிலையிலேயே மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் முதல்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது. சபை அமர்வின் ஆரம்பத்தில் முதர்வரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களால் பேசப்பட்டது.

இதன் பின்னர் ஒவ்வொரு உறுப்பினர்களும் நிகழ்ச்சி நிரலை தாண்டி தமக்கு இடையில் வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டு சபையினை அமளிப்படுத்தியிருந்தனர்.

சபையில் ஏற்பட்ட அமளித்தன்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முதலர்வர் பல முறை முயட்சித்த போதும், உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களை அவரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

நிகழ்ச்சி நிரலை தாண்டி நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் பல மணி நேரத்தின் பின்னர் முடிந்ததும், கருத்து வெளியிட்ட முதல்வர் உறுப்பினர்கள் எவரும் பக்குவப்படவில்லை. முதலில் பக்குவப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் பங்கு கொள்ளும் போது எவ்வாறான உடை அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அனால் அந்த அறிவுறுத்தலை ஏற்று எந்த உறுப்பினரும் சபைக்கு ஏற்ற உடையணிந்து வருவதில்லை. பாடசாலை மாணவர்கள் போல் வருகின்றார்கள்.

ஒரு உறுப்பினர் சபையில் பேசும் போது குறுக்கிட்டு பேச வேண்டாம் என்று பல முறை தெரிவித்தும், அதனi உறுப்பினர்கள் பின்பபற்றுவதில்லை.

தாமே வாக்குவாதங்களில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் கௌரவ உறுப்பினரை இவ்வாறு சொல்லிவிட்டார் என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது. உறுப்பினர்கள் நீங்களே உங்களுயைட கௌரவத்தை இழக்கின்றீர்கள் என்றார்.
Previous Post Next Post