மாலைதீவு தப்ப முற்பட்ட கஞ்சிபான இம்ரான் சற்று முன் கைது! - Yarl Thinakkural

மாலைதீவு தப்ப முற்பட்ட கஞ்சிபான இம்ரான் சற்று முன் கைது!

டுபாயில் வைத்து மாகந்துரே மதூ{டன் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரான் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்த நிலையில் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல முற்பட்ட நிலையில், அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , விசாரணைகளின் பின்னரே அது தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு அறிவிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
Previous Post Next Post