ஹோம் சுவீட் ஹோம் திட்டம் அறிமுகம்! -புதிய தம்பதியினருக்கு வாய்ப்பு- - Yarl Thinakkural

ஹோம் சுவீட் ஹோம் திட்டம் அறிமுகம்! -புதிய தம்பதியினருக்கு வாய்ப்பு-

நாட்டில் புதிதாக திருமணம் செய்பவர்களுக்கான கடன் திட்டம் ஒன்று இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஹோம் சுவீட் ஹோம் என்ற கடன் திட்டமே வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

ஹோம் சுவீட் ஹோம் திட்டம் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தமாண்டுக்கு முன்னர் நடமுறைக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கான சிபாரிசுகள் அரச வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோம் சுவீட் ஹோம் கடன் முறையின் கீழ் 6 சதவீத வட்டிக்கு 25 வருட காலத்துக்கு திருப்பி செலுத்த கூடிய வகையில் 10 லட்சம் வரையில் கடனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post