ஆர்.சி.பி க்கு இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! -ஹர்பஜன் சிங் கலக்கல் ட்விட்டு- - Yarl Thinakkural

ஆர்.சி.பி க்கு இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! -ஹர்பஜன் சிங் கலக்கல் ட்விட்டு-

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 70 ரன்னில் சுருண்டது.

ஹர்பஜன் சிங் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

3 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி கடந்த மூன்று சீசனில் வெற்றி பெற்றதே கிடையாது. தற்போதும் அது தொடர்கிறது.

ஆர்சிபி தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட் செய்து கிண்டல் செய்துள்ளார்.
Previous Post Next Post