கோட்டா கொலைகாரன்! -சிறி எம்.பி காரசார குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

கோட்டா கொலைகாரன்! -சிறி எம்.பி காரசார குற்றச்சாட்டு-

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதர் கோட்டபாய ராஜபக்ச ஒரு கொலைகாரன். அவர் ஜனாபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.

மேற்கண்டவாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொலை செய்து இந்த மண்ணில் பெரிய இனப்படுகொலையை நடத்திய கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கிறார்.

ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவை கோட்டாபய முதலில் விடவேண்டும். அந்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றார்.
Previous Post Next Post