தல்செவன விடுதி இராணுவத்திடம் இருந்து மீட்கப்படும்! -மாவை எம்.பி தெரிவிப்பு- - Yarl Thinakkural

தல்செவன விடுதி இராணுவத்திடம் இருந்து மீட்கப்படும்! -மாவை எம்.பி தெரிவிப்பு-

வலி.வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தல்செவன விடுதி உள்ளிட்ட 30 ஏக்கர் காணியை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுகக்ப்படும் என்று தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருடன் அவசர பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வலிகாமம் வடக்கில் உள்ள ஜே.234 கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள 30 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவம் அங்கு தலல்செவன ஹோட்டல் மற்றும் தங்குமிட விடுதிகளை நடத்தி வருகின்றது. 
இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தரப்பு ஈடுபட்டுள்ளது. 

இச் சுவீகரிப்பு நடவடிக்கையினை நிறுத்துமாறு அரசிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இதன் கேரிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். 

இப் பேச்சுவார்த்தையின் ஊடாக தல்செவன ஹோட்டல் இராணுவத்திடம் இருந்து மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். 
Previous Post Next Post