பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா - Yarl Thinakkural

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா


ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ராஜஸ்தானில், இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியருகே காலை 11.30 மணியளவில் ஆளில்லா உளவு விமானம் ஊடுருவியது இந்திய விமானப் படையின் ராடார் கண்காணிப்பு அமைப்புக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, பிகானீர் நகருக்கு வெளியே அமைந்துள்ள விமானப்  படைத் தளத்தில் இருந்து "சுகோய்-30 எம்கேஐ' ரக போர் விமானங்களை இந்திய விமானப் படை விண்ணில் செலுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆளில்லா விமானத்தை சுகோய் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. நடுவானிலேயே இந்த தாக்குதல் நடந்தது.

Previous Post Next Post