விமானத்தை இயக்க முடியவில்லை- நடு வானில் பதறிய விமானி - Yarl Thinakkural

விமானத்தை இயக்க முடியவில்லை- நடு வானில் பதறிய விமானி157பேர் பலியான எதியோப்பியா ஏயார் லைன்ஸ் விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளதாக விமானி குறிப்பிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எதியோப்ப தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் எட்டு விமான பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த 157பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து எதியோப்ப விமானம் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதிகாரி  டிவோல்ட் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானத்தில் எந்த தொழில்நுட்ப குறைபாடும் ஏற்படவில்லை. விமானியின் தரவுகளும் நல்ல நிலையிலே உள்ளன. விபத்துக்குள்ளாவதற்கு முன்னர், அந்த விமானத்தின் விமானி தான் விமானத்தை செலுத்துவதற்கு சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்றும், திரும்பி வர இருப்பதாக அந்த விமானி குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post