அரசியலமப்பை மீறி ஐ.நா தீர்மானத்தில் எதுவும் நடக்காது! -மைத்திரி உறுதி- - Yarl Thinakkural

அரசியலமப்பை மீறி ஐ.நா தீர்மானத்தில் எதுவும் நடக்காது! -மைத்திரி உறுதி-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பு தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post