வீதியால் சென்ற இளம் யுவதி ஒருவர் முகமூடி அணிந்து வந்த இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த யுவதி தனது சகோதரனுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சகோதரனுடன் வல்வெட்டித்துறை நோக்கி சென்றுள்ளார்.
அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிலில் வந்த முகமூடி அணிந்த குழுவினர் வழிமறித்து யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.