இந்தியர்கள் இருவர் யாழில் கைது! - Yarl Thinakkural

இந்தியர்கள் இருவர் யாழில் கைது!

இந்தியாவில் இருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள நகைகடை ஒன்றில் தொழில் புரிந்த குற்றச்சாட்டில் இந்தியர்கள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த நகைகடைக்கு சென்ற பொலிஸார் இரு இந்தியர்களின் கடவுச்சீட்டினையும் சோதணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இதன் போது அவர்கள் நாட்டுக்குள் வந்தமை சுற்றுலா விசா என்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த இரு நபர்களும் தமிழக மாநிலத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்தியவர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post