விமானி அபிநந்தனை தாக்கிய பாக்., இளைஞர்கள் - Yarl Thinakkural

விமானி அபிநந்தனை தாக்கிய பாக்., இளைஞர்கள்இந்திய விமானி அபிநந்தனை தாக்கியது பாகிஸ்தான் இளைஞர்கள் என பாகிஸ்தான் இதழ் 'டான்' செய்தி வெளியிட்டுள்ளது. 

பிஸ்டலுடன் வந்த  அபிநந்தன் அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்று கூறியுள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து கோசமிட்டார் அபிநந்தன். இளைஞர்களிடம், தன்னுடைய முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்தியாவை ஆதரித்து அவர் பேசியது பாக். இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே கீழே கிடந்த கற்களை எடுத்து, அபிநந்தனை தாக்க ஆரம்பித்தனர். துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டார். மற்றவர்கள் அபிநந்தனை சூழ்ந்து தாக்கினார். இதனிடையே அங்கு சென்ற பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அவர்களிடமிருந்து அபிநந்தனை மீட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post