சர்கார் கூட்டணி மீண்டும் இணைகிறது! - Yarl Thinakkural

சர்கார் கூட்டணி மீண்டும் இணைகிறது!

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ஒரு திருமண விழாவிற்காக நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் அகியோர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இயக்குனர் அட்லியும் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நாஞ்சில் சம்பத், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
Previous Post Next Post