சிறையில் உள்ள கணவருக்காக மனைவி செய்த செயல்! - Yarl Thinakkural

சிறையில் உள்ள கணவருக்காக மனைவி செய்த செயல்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக உள்ள தனது கணவருக்காக பொரித்த மீனுக்குள் 210 மில்லி கிராம் ஹெரோயினினை மறைத்து வைத்து கொடுத்த மனைவி சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று - ஆலம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

குறித்த நபரை சிறைச்சாலையில் சென்று பார்ப்பதற்கு மனைவி நேற்று மதியம் சென்றுள்ளார்.

மதிய உணவுடன் சென்ற அவர் பொரித்த மீனுக்குள் ஹேரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார்.

உணவு பொதியை சோதனை செய்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அதற்குள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் அவரை கைது செய்த அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Previous Post Next Post