வாகனங்களில் ‘அதீத ஒலி வர்ண ஒளி’ தண்டனை உறுதி! -பொலிஸ் அறிவிப்பு- - Yarl Thinakkural

வாகனங்களில் ‘அதீத ஒலி வர்ண ஒளி’ தண்டனை உறுதி! -பொலிஸ் அறிவிப்பு-

ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை ஓசை (ஹோன்) வர்ண மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன எச்சரிக்கை செய்துள்ளார்.

சகல வாகணங்களையும் பொலிஸார் முற்றுகையிட்டு இதுதொடர்பில் ஆராயவுள்ளார்கள் என்றும் முதற்கட்டமாக பயணிகள் பஸ்கள் முற்றுகையிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்களில் இவ்வாறான பாகங்களை பொறுத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்களை போன்று சாரதிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணமும் பல்வேறு வர்ணங்களை கொண்ட மின்குமிழ்களை ஒளிர விட்ட வண்ணம் செல்லும் பஸ்களை பரிசோதனை செய்யும் இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் பிரதேச மட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post