மட்டுவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்! -அறிவித்தும் பொலிஸ் வராததால் பதற்றம்-  - Yarl Thinakkural

மட்டுவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்! -அறிவித்தும் பொலிஸ் வராததால் பதற்றம்- 

யாழ்ப்பாணம் மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது சற்று முன்னர்வாள் மற்றும் கொடாரிகளால் சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் இதுவரை சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்லவில்லை. 

குறித்த வீட்டின் உரிமையாளர் சாவகச்சேரி HNB பணியாளரும் சமாதான நீதவானுமாவார். இவரது வீட்டிற்கு தலைக் கவசம் இல்லாது இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தாக்குதல் நடத்திய கும்பல் இருபது பேர் வரை மட்டுவில் சந்தியில் தற்போதும் ஆட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றமான நிலையில் வெளியே சென்ற பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.
Previous Post Next Post