புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியளத்தில் வேலைவாய்ப்பு! - Yarl Thinakkural

புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியளத்தில் வேலைவாய்ப்பு!

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தில் பின்வரும் பதவிகளிற்கான ஏற்பட்டுள்ள வெற்றிடங்களிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக முகாமைத்துவ உதவியாளர் சாரதி அலுவல உதவிப் பணியாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களே கோராப்பட்டுள்ளது.

முகாமைத்துவ உதவியாளராக விண்ணப்பிப்பவர்கள் ஒரே முறையில் ஆங்கிலமொழி உட்பட கல்விப்பொதுத் தராதர சாதாணதரம் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி மற்றும் சிங்களம், தமிழ்மொழி, கணிதம் மற்றும் ஏதேனும் இரண்டு பாடங்களில் (2) உட்பட (4) நான்கு பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும் கல்விப் பொதுதராதரப் பத்திர (உயர்தரம்) பரீட்சையில் சாதாரண பொது அறிவு தவிர்ந்த (03) மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். இதுமட்டுமல்லாமல் அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனமொன்றில் கணனிப் பாடநெறியொன்றைபயின்றிருத்தல் வேண்டும்.

உள்ளக விண்ணப்பத்hரர்கள் ஆங்கில மொழி உட்பட கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாணதரம்) பரீட்சையில் ஆறு (06) பாடங்களில் சித்தி மற்றும் சிங்களம் தமிழ்மொழி, கணிதம் மற்றும் வேறு ஏதேனும் இரண்டு (02) பாடங்கள் உட்பட (04) நான்கு பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும் ஆரம்ப மட்டம் - பயிற்சி (PL-3) அரைப்பயிற்சி (PL-2) பயிற்சியற்ற (PL-1) மட்டத்தின் நிரந்தரப் பதவியொன்றில் 08 வருடகால திருப்திகரமான சேவைக்கால அனுபவத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அலுவலகப்பணி உதவியாளருக்காக விண்ணப்பிப்பவர்கள் கல்விப் பொதுதராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் (02) இரண்டு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கான சம்பள அளவுத்திட்டம் முகாமைத்துவ சேவைகள் சுற்றிக்கையின் பிரகாரம் வழங்கப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post