வெப்பநிலை அதிகரிப்பு! -அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை- - Yarl Thinakkural

வெப்பநிலை அதிகரிப்பு! -அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை-

நாட்டில் தற்போது அதிகரித்துக் காணப்படும் வெப்பநிலை குறித்து பொது மக்கள் கூடுதல் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைத்தளங்களில் கூடுதல் நீர் அருந்தி இயலுமானவரை நிழலை நாடுமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

வீடுகளில் வசிக்கும் முதியவர்களை, நோயாளிகள் மீது கூடுதல் கவனம் தேவை. வாகனங்களில் பிள்ளைகளை தனியாக விட வேண்டாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Previous Post Next Post