யாழ்.புங்கங்குளத்தில் நகை திருட்டு! -சந்தேக நபர் மடக்கிப்பிடிப்பு- - Yarl Thinakkural

யாழ்.புங்கங்குளத்தில் நகை திருட்டு! -சந்தேக நபர் மடக்கிப்பிடிப்பு-

யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவரை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

2018 ஆம் ஆண்டு அரியாலை புங்கங்குளப் பகுதியில் உள்ள வீட்டொன்றின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த நபர் அங்கிருந்த 5 பவுண் நகையினை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

அவர் அங்கிருந்து தப்பிச் செல்வதை கண்ட பெண்ணொருவர் அவரை துரத்திச் சென்ற நிலையில் அப் பெண்ணையும் தாக்கிய திருடன் அவரிடம் இருந்த ஒரு பவுண் தங்க சங்கிலியையும்  பறித்துச் சென்றுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான விசேட பொலிஸ் குழு நடத்திய புலனாய்வு ரீதியான விசாரணையில் திருடன் இனங்காணப்பட்டுள்ளார். 

இதன்படி இன்று காலை புங்கங்குளப் பகுதிக்குச் சென்ற விசேட பொலிஸ் குழு அவரை கைது செய்துள்ளது. 

அவரிடம் இருந்த 6 பவுண் நகையினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். விசாரணையின் பின்னர் அவரை சான்று பொருடன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 
Previous Post Next Post