கொடிகாமத்தில் விபத்து! -சாவா குழு தலைவர் ஆபத்தான நிலையில்-  - Yarl Thinakkural

கொடிகாமத்தில் விபத்து! -சாவா குழு தலைவர் ஆபத்தான நிலையில்- 

யாழ்.கொடிகாமம் கச்சாய் வீதியில்  மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் சாவா குழுவின் தலைவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. 

இதனால் கொழுத்தும் வெயிலில்  வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர் கள் கிடந்துள்ளார்கள்.  

பின்னர் ஆட்டோ ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதே வேளை விபத்து இடம்பெற்று  பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்க்கு காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post