கூட்டமைப்பு அரசாங்கத்தை காப்பாற்றுவது உண்மையே! -ஒப்புக் கொள்கிறார் சிறிதரன்- - Yarl Thinakkural

கூட்டமைப்பு அரசாங்கத்தை காப்பாற்றுவது உண்மையே! -ஒப்புக் கொள்கிறார் சிறிதரன்-

நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கி அரசைக் காப்பாற்றி வைத்திருப்பதாகக் கூறுவது உண்மையே. அதற்குக் காரணம் இருக்கின்றது.

இப்போது இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்சதான் ஆட்சிக்கு வருவார்.

ஆகவே, ரணில் அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறினால் இந்த அரசு கவிழும். அரசு கவிழ்ந்தால் மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார். நாங்கள் நடுநிலைமை வகித்தாலும் அவர் வருவார்.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவதை எமது மக்கள் விரும்புவார்களா? ஆகவே, நாங்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றார்.
Previous Post Next Post