வடமராட்சியில் கசிப்பு உற்பத்தி! -மாட்டியவருக்கு விளக்கமறியல்- - Yarl Thinakkural

வடமராட்சியில் கசிப்பு உற்பத்தி! -மாட்டியவருக்கு விளக்கமறியல்-

வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியில் 750 மில்லிலீற்றர் கசிப்பினை உடமையில் வைத்திருந்து விற்பணை அதே இடத்தினைச் சேர்ந்த 40 வயதுடைய நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.

குறித்த நபர் கடந்த மாதம் 22ம் திகதி 750 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த நபர் தொடர்பான வழக்கு மீள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மேலதிக அறிக்கையுடன் இணைந்திருந்த நெல்லியடி பொலிஸார் குறித்த சந்தேக நபரின் மனைவிக்கு கசிப்பு உற்பத்தியில் பருத்தித்துறை நீதிமன்றினால் மூன்று முன்குற்றங்கள் உள்ளது எனவும், சகோதரிக்கு 2 குற்றங்களுக்கு தாய் கசிப்பு காய்சி விற்பணை செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டப்பட்டது.

வழக்கினை ஆராய்ந்த நீதிவான் மீளவும் 14நாட்கள் சந்தேக நபரை யாழ்சிறைச்சாலையில் தடுத்து வைக்க கட்டளையிட்டார்.
Previous Post Next Post