அரசியல் வாதிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு! - Yarl Thinakkural

அரசியல் வாதிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் வருடாந்த கணக்கறிக்கை, கட்சியின் கொள்கை பிரகடனம் மற்றும் யாப்பு என்பவற்றை மக்களுக்கு வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகளையும் தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான கேள்வி நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரசியல் கட்சிகளின் தகவல்களை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post