சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி? - Yarl Thinakkural

சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி?

சீனாவில் உள்ள இளம் பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் Xiamen  மாகாணத்தில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார்.

தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது.

இதனால் அவர் இரண்டு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்த போதும், குழந்தைகளுக்கு னயெ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதன்படி Fujian பகுதியில் இருக்கும் Forensic Identification Centre-ல் DNA சோதனை செய்துள்ளார். அதில் ஒரு குழந்தை இவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை இவருக்கு பிறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பரிதாப தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது அவரின் மனைவி இல்லை, தனது கணவர் பொய் கூறுகிறார் என்று மறுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரே இரவு மட்டும் கணவருக்கு தெரியாமல் வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் கணவர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இரட்டை குழந்தைகள் எப்படி தனித் தனியாக இன்னொரு நபருக்கு பிறக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் வல்லூநர்கள் தெரிவிக்கையில் இது போன்று குழந்தைகள் பிறக்கும் எனவும், சுமார் 13,000 தம்பதிகளில் ஒரு தம்பதிக்கு அவ்வாறு நடப்பதுண்டு என தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post