விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘காக்கி’ - Yarl Thinakkural

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘காக்கி’

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக கொலைகாரன்’ படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, அக்னிச் சிறகுகள்’, தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஸ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு காக்கி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே ஹகாக்கி’ டா வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜெய், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்குகிறது.

திமிரு புடிச்சவன்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக முதல்முறையாக சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post