புடவைகளில் அபிநந்தன் புகைப்படம் - Yarl Thinakkural

புடவைகளில் அபிநந்தன் புகைப்படம்இந்தியா, பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்கள் , மற்றும் விமானப்படை கொமாண்டர் அபிநந்தனின் புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட புடவைகள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது செய்தித்தளங்களையும், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது இந்தியாவின் அதிரடித் தாக்குதலும், கெமாண்டர் அபிநந்தனும் தான்.

இந்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, சேலை விற்பனையை அதிகரிக்க வடிவமைப்பாளர்கள், அபிநந்தன் மற்றும் இந்திய விமானப் படையின் அதிரடி தாக்குதல் புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட சேலைகளை உற்பத்தி செய்துள்ளனர்.

இந்த சேலைகள் கடைகளில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போன்ற சேலைகளை வடிவமைத்து தருமாறு சேலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஓர்டர்கள் குவிந்துள்ளன.

Previous Post Next Post