-யாழ் உட்பட வடக்கில் எலி காய்ச்சல்- சுகாதார பிரிவு எச்சரிக்கை! - Yarl Thinakkural

-யாழ் உட்பட வடக்கில் எலி காய்ச்சல்- சுகாதார பிரிவு எச்சரிக்கை!

வடக்கின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் வவுனியாவில் 26 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகின்றது.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காணப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சற்றுக் குறைவானதாகவே காணப்படுகின்றது.

எனினும், மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாகாணங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post