சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சு பொறுப்புக்களை வழங்கவுள்ளவர்களுடைய பெயர் விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர கட்சியை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏலவே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை ஐக்கிய தேசிய கட்சியினால் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்ட போதும், அது இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.