இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டர் அபிநந்தன்! -மக்கள் அமோக வரவேற்பு- - Yarl Thinakkural

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டர் அபிநந்தன்! -மக்கள் அமோக வரவேற்பு-

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் 4 மணி நேரம் மக்கள் காத்திருக்க மருத்துவ பரிசோதனைகள் முடிந்து சற்று முன்னர் இரவு 9.20 மணியளவில் வாகா எல்லை வழியாக அபிநந்தன் அழைத்து வரப்பட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

அவரை பார்த்த பொதுமக்கள் வாழ்க.. வாழ்க.. என்று கோஷமிட்டனர். இதையடுத்து அபிநந்தன், அமிர்தசரசுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கிருந்து, விமானத்தின் மூலம், டெல்லி பயணிக்க உள்ளார் வீர மகன் அபிநந்தன் என அவருக்கு அதிகாரிகளும், பொதுமக்களும் வாகா எல்லையில் . வாகா எல்லையில் அவரை அதிகாரிகளும், பொதுமக்களும் வரவேற்றனர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். நாடு முழுவதும் மக்கள் அவரது வருகையை கொண்டாடினர். 

விங் கமாண்டர் அபிநந்தன், இன்று மாலை, லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு மாலை 5.20 மணியளவில் அபிநந்தன் அழைத்து வரப்பட்டிருந்தார். இந்தியாவிடம் ஒப்படைக்கும் கால நேரத்தில், 2 முறை பாகிஸ்தான் மாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்திய வீரரை ஒப்படைக்க இழுத்தடித்து பாகிஸ்தான் வேடிக்கை காட்டியதக வாகா எல்லையில் கொந்தளிப்பான சூழல் உருவானது எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post