வடக்கு ஆளுநருக்கு எதிராக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்! - Yarl Thinakkural

வடக்கு ஆளுநருக்கு எதிராக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிரான போராட்டம் ஒன்று முல்லைதீவு மாவட்டத்தில் நடத்தப்பட்டது.

ஆளுநர் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நாய்களென கீழ்த்தனமான வார்த்தையார் வர்ணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வருடக்கணக்கில் முல்லைத்தீவில் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி வீதியில் இருந்து போராடி வரும் மக்களே இன்று தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
Previous Post Next Post