யாழ்.வருகிறார் மேரி ஏன் ஹாகன்! - Yarl Thinakkural

யாழ்.வருகிறார் மேரி ஏன் ஹாகன்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்த உள்ளார் என்று இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிதிமூலம் வழங்குவது தொடர்பிலேயே அவர் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post