வாக்காளர் இடாப்பு தயாரிப்பு பணி ஆரம்பம்! - Yarl Thinakkural

வாக்காளர் இடாப்பு தயாரிப்பு பணி ஆரம்பம்!

இவ்வாண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இம்மாதம் கிராம உத்தியோகத்தர்களின் அறிவூட்டும் நிகழ்வும், புதிய வாக்காளர்களின் வீடுகளுக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்று  மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்முறை வாக்காளர்களின் பெயர்களை இடாப்பில் இணைத்துக் கொள்ளும் நடைமுறை கடந்த கால நடைமுறைகளிலும் வித்தியாசமானது.

இதனடிப்படையில் வீட்டில் வசிக்கும் புதிய நபர்களுடைய விபரங்களை வீட்டு உரிமையாளர் அல்லது தலைமை நிர்வாகி விண்ணப்பப் படிவத்தில் பதிய வேண்டும் என்பதே நடைமுறையாகும்.

அத்துடன், 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனக் குறைபாடு உடையவர்களின் விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Previous Post Next Post