“அபிநந்தன் போர்கைதியே” பாகிஸ்தான் அறிக்கை! - Yarl Thinakkural

“அபிநந்தன் போர்கைதியே” பாகிஸ்தான் அறிக்கை!

இந்தியாவின் விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறித்து பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், விமானி அபிநந்தன் பிடிபட்டது பற்றியும், வாகா எல்லையில் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பற்றியும் கூறி உள்ள பாகிஸ்தான், தங்கள் காவலில் இருந்த போது அபிநந்தனை சர்வதேச விதிமுறைகளின்படி நல்லமுறையில் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளது.

அத்துடன் அபிநந்தனை ‘போர்க்கைதி’ என்றும் அந்த அறிக்கையில் பாகிஸ்தான் குறிப்பிட்டு இருக்கிறது.

வாகா எல்லைக்கு அழைத்து வரும் முன், அபிநந்தனின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்தனர். இதனால்தான் அவரை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post