இலங்கை மீது மற்றுமொரு பிரேரணை! -ஐ.நாவில் இன்று- - Yarl Thinakkural

இலங்கை மீது மற்றுமொரு பிரேரணை! -ஐ.நாவில் இன்று-

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மீள வலியுறுத்தும் வகையிலான பிரேரணையொன்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வியாழக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

அத்தோடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுமாறு இப்பிரேரணையின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளும் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளன.

இப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி இரண்டு வருட கால அவகாசத்தை கோர தயாரென ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post