மாவா பாக்குடன் கைதான இளைஞருக்கு மறியல்! - Yarl Thinakkural

மாவா பாக்குடன் கைதான இளைஞருக்கு மறியல்!

யாழில் கஞ்சா கலந்த போதைப் பாக்கான மாவா பாக்கினை தன்வசம் வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரனே மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வடமராட்சி கரணவாய் பகுதியினை சேர்ந்த இளைஞன் சிவராத்திரி தினத்தன்று மாவா பாக்குடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரின் உடமையில் இருந்து 3 சிறிய பொட்டத்திலான கஞ்சா கலந்த மாவா பாக்கு மீட்கப்பட்டது.

குறித்த நபரினை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது விளக்கமறியில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post