சிகரெட்,வெற்றிலைக்கு வருகிறது முழுத் தடை! - Yarl Thinakkural

சிகரெட்,வெற்றிலைக்கு வருகிறது முழுத் தடை!

நாட்டில் உள்ள அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் புதைத்தர் வெற்றிலை போன்றவற்றை பயன்படுத்துவது முற்றாக தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கை மிக விரைவில் அனைத்து திணைக்களங்கள் மற்றுமு் அலுவலங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

குறிப்பாக வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின் காரணமாக வாய்புற்று நோய் ஏற்படக்கூடிய நிலைமையை கவனத்திற் கொண்டு அரச நிறுவனங்களில் அலுவலக பணியாளர் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வருகைத் தரும் பொதுமக்கள் மற்றும் நிறுவன வளவில் வெற்றிலை புகையிலை மற்றும் பாக்கு உள்ளிட்ட தயாரிப்பை பயன்படுத்துவதை தடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இதற்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக அரச நிர்வாக சுற்று நிருபத்தை வெளியிடுவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous Post Next Post