பா.ஜ.க.வில் இணைந்த கிரிக்கெட் வீரரின் மனைவி - Yarl Thinakkural

பா.ஜ.க.வில் இணைந்த கிரிக்கெட் வீரரின் மனைவிபிரபல கிரிக்கெட் வீரர், ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி, குஜராத்தில் நடந்த விழாவில் நேற்றுமுன்தினம் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் நடந்த பா.ஜ.க. விழாவில், விவசாயத்துறை அமைச்சர் பால்டு முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஜாம்நகர் ஜடேஜாவின் சொந்த ஊர். எனினும் அவர் ஹோட்டல் நடத்தி வரும் ராஜ்கோட்டில் தான் தனது மனைவி ரிவபாவுடன் வசித்து வருகிறார்.

 கடந்த 2016இல் ரிவபாவை மணந்தார் ஜடேஜா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குஜராத், ஜாம் நகர் மக்களால் இவர் மிகவும் விரும்பப்படுவதால், இவரின் வருகை பா.ஜ.க.வுக்கு வலு சேர்க்கும் என கூறப்படுகின்றது.Previous Post Next Post