புன்னாலைக்கட்டுவனில் இந்து மயானம் வேண்டும்! -சுன்னாகம் பி.ச வை முடக்கி ஆர்ப்பாட்டம்- - Yarl Thinakkural

புன்னாலைக்கட்டுவனில் இந்து மயானம் வேண்டும்! -சுன்னாகம் பி.ச வை முடக்கி ஆர்ப்பாட்டம்-

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதி மக்கள் தமக்கான இந்துமாயணம் வேண்டும் என கோரி சுன்னாகம் பிரதேச சபையினை முற்றுகையிட்டு இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சபையின் பிரதான வாசலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், இன்று சபை அமர்வில் கலந்து கொள்ள வந்த உறுப்பினர்கள் உட்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த சபை தவிசாளர் க.தர்சன் இன்று நடைபெறவுள்ள சபை அமர்வில் இவ்விடம் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தி உரிய தீர்வு பெற்று தரப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதனால் தங்களை சபைக்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

தவிசாளரின் உறுதிமொழியை ஏற்ற மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.
Previous Post Next Post