அமெரிக்க தூதர் அலைனா வலி.வடக்கிற்கு விஜயம்! - Yarl Thinakkural

அமெரிக்க தூதர் அலைனா வலி.வடக்கிற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை வருகைதந்துள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன்படி இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டார்.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உள்ள சவால்கள் மற்றும் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post