மனநலம் குன்றியவருக்கு சித்திரவதை! -வடமராட்சியில் சொத்துக்காக நடக்கும் கொடுமை- - Yarl Thinakkural

மனநலம் குன்றியவருக்கு சித்திரவதை! -வடமராட்சியில் சொத்துக்காக நடக்கும் கொடுமை-

 
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் மனநலன்பாதிக்கப்பட்டவரின் சொத்தை அபகிரிப்பதற்காக அவருக்கு தொடர்ச்சியாக சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.   

சொத்து ஆசையில் நடக்கும் இச்சித்திரவதையால் ஒரு நாள் மனநலம் குன்றியவரின் உயிர் பிரியும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

யாழ் பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த மனநலம் குண்ரியவரின் பெயர் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். 

இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். 

இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவருகின்றது. 

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த (J411) பெண் கிராமசேவகருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன்கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் குறித்த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.
Previous Post Next Post