விமான விபத்திலிருந்து தப்பிய பயணி - Yarl Thinakkural

விமான விபத்திலிருந்து தப்பிய பயணி


எதியோப்பிய விமான விபத்தில் பயணி ஒருவர் தாமதமாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

எதியோப்ப ஏயார்லைன்ஸ_க்கு சொந்தமான போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டனர்.

இதில் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்க ஆந்திராவை சேர்ந்த நுகவராப்பு மனிஷா என்பவர் சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அதே கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ் என்பவர் இரு நிமிடம் தாமதமாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இவர் இரு நிமிடம் தாமதமாக வந்ததால் விமான நிலைய புறப்பாடு கேட் மூடப்பட்டு விட்டது.
Previous Post Next Post